அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை - அன்பில் மகேஷ்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும். அது தொடர்பாக முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு என்ன ஆலோசனை வருகிறதோ  அதைப் பின்பற்றி செயல்படுவோம்.

இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது நிச்சயம் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் கூறியதாவது, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.இதுபோன்று இனி வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மதமாற்றம்  தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழு விசாரணை நடைபெறும். காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே தயவு கூர்ந்து, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளியில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT