முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பகிர்:


தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்பிபிஎஸ் இடங்களில் 1,930 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் மொத்தம், 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தரவரிசைப் பட்டியலை https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களின் மூலம் அறியலாம்.

Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. 

அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

கலந்தாய்வு தேதிகள்:

ஜனவரி 27-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது. 

28, 29-ஆம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன் பின்னா், 30-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது.

இணைய வழியில் கலந்தாய்வு:

இந்தக் கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பாா்கள் என்பதால், கரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இணைய வழியே இம்முறை கலந்தாய்வு நடைபெறுகிறது. அது தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அதில் உள்ள இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments