முகப்பு
தமிழ்நாடு

5 மாநிலங்களில் ரூ. 651கோடி! தமிழ்நாட்டில் ரூ.170 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ரூ.170 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2026, 4:19 pm IST
பணம்.
பகிர்:

தேர்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ரூ.170 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கேரளத்தில் ரூ.58 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ.319 கோடி, அஸ்ஸாமில் ரூ.97 கோடி, புதுச்சேரியில் ரூ.7 கோடி என 5 மாநிலங்களிலும் இதுவரை ரூ.651 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவித்தார்.

Advertisement

Advertisement

மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

summary

Approximately Rs. 170 crore in cash, liquor, drugs, precious metals, and freebies has been seized in Tamil Nadu, marking it as a major contributor to the total seizures.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.