தமிழ்நாடு

நாளை(ஜன.25) மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வேண்டுகோள்

DIN

மொழிப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை அஞ்சலி செலுத்த வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

“கரோனா தொற்றுப் பரவல் காரணமாக  ஜனவரி 25-ஆம் நாள் - மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, ஹிந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்ட திமுக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து,  மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள், முன்னோடிகள், நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT