ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு  (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு 

அரசுப் பணிக்கான அறிவுத் தேடல் என்ற வாசகத்துடன் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தும் பொதுத் தமிழ்  போட்டித் தேர்வு - 2022, பிப்ரவரி 6 ஆம் தேதி இணைய வழியில் நடத்தப்படுகிறது.

DIN

அரசுப் பணிக்கான அறிவுத் தேடல் என்ற வாசகத்துடன் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தும் பொதுத் தமிழ்   போட்டித் தேர்வு - 2022, பிப்ரவரி 6ஆம் தேதி இணைய வழியில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை, இணைய வழியில் கூகுள் படிவம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை 7550151584 என்ற ஜி-பே எண்ணில் செலுத்தலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31, 2022.

தமிழ் இலக்கணம் என்ற பாடத்திட்டத்தில் நடைபெறும் இந்தப் போட்டித் தேர்வில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.25,000 ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.15,000மும், மூன்றாம் பரிசாக ரூ.10,000மும், ஆறுதல் பரிசாக, 50 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தொகுக்கப்பட்டுள்ள 'டிஎன்பிஎஸ்சி சமச்சீர் தமிழ் இலக்கணம்' பாடநூல், முன்பதிவு செய்த அனைவருக்கும் பிடிஎஃப் ஆக வாட்ஸ்அப்-பில் அனுப்பி வைக்கப்படும்.  போட்டித்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் இந்த பாடநூல் தொகுப்பிலிருந்து மட்டுமே கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி ? 
இந்தப் போட்டித்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், நுழைவு கட்டணம் ரூ.100-ஐ 7550151584 என்ற ஜி-பே எண்ணுக்கு செலுத்தி, அதற்கான ஆதாரத்துடன் ‘டிஎன்பிஎஸ்சி தமிழ் இணையதள போட்டி’ என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியை 9962600038-என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். 

பதிவு செய்த தேர்வர்களுக்கு, போட்டித்தேர்வுக்கான பாடநூல் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT