தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 30,215 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 30,215 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று நிலவரம் பற்றிய தரவுகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,64,205 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 24,639 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 29,20,457 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 37,264 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 2,06,484 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 6,296 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள பிற மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 1,742
கோவை - 3,786
ஈரோடு - 1,199
கன்னியாகுமரி - 1,236
சேலம் - 1,089
தஞ்சாவூர் - 1,117
திருப்பூர் - 1,504

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT