முகப்பு
தமிழ்நாடு

20-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்:10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 20-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 17,919 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 20-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 17,919 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 3 லட்சத்து 80,570 நபா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற 20-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 17,919 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதில் முதல் தவணையாக 2 லட்சத்து 55,902 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 7 லட்சத்து 27,417 பயனாளிகளுக்கும் மற்றும் 34,600 நபா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 90.30 சதவீதம் முதல் தவணை, 68.66 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.