சு.முத்துசாமி. 
தமிழ்நாடு

அமைச்சர் சு.முத்துசாமிக்கு கரோனா

ஈரோட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

ஈரோடு: ஈரோட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில நாள்களாக அமைச்சர் முத்துசாமி பல்வேறு அரசு திட்ட விழாக்களில் பங்கேற்று வந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்த கட்சியினரிடம் நேர்காணல் நடத்தி வந்தார். இதேபோல் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்தும் வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமிக்கு லேசான காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்தது. 

இதைத் தொடர்ந்து அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது. இதில் அமைச்சர் முத்துசாமிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவருக்கு லேசான அறிகுறியே காணப்படுவதால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. 

இதையடுத்து அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT