முகப்பு
தமிழ்நாடு

காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்: கமல்ஹாசன் புகழாஞ்சலி 

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
பகிர்:

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் காந்தியடிகளின் திருவுருவச்சிலை மற்றும் அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காந்தியடிகளுக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. 
உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →