தமிழ்நாடு

தேக்கடியில் பொதுமுடக்கம்: சுற்றுலாப் பயணிகள் வருகை ரத்து

DIN


கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் பொதுமுடக்கம் நடைபெற்றதால் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் தேக்கடி  படகுத்துறை வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா  தொற்று பரவல் காரணமாக கேரள அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தை அறிவித்தது.

அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது பொதுமுடக்கம் நடைபெற்றது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் குமுளி மலைச்சாலை மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலை அடைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு நாள்தோறும் வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

பால் கொண்டு செல்லும் லாரி வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளான தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மற்ற சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இடுக்கி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார் மற்றும் ஆட்டோ வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நகரின் முக்கிய பகுதிகளில் ஆள்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு ரோந்து சென்றனர். அவசர ஊர்தி வாகனங்கள் மட்டும் இயங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT