தமிழ்நாடு

பிப்ரவரி 1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

DIN


சென்னை: பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம், கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு, வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்ல தடை என பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் மெரீனா, பெசண்ட் நகர் கடற்கரை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்கள், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. 

இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் கடற்கரைகளில் கூட்டமாக கூடக் கூடாது. முகக்கவசம் அணிந்து செல்வது போன்ற கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT