அதிமுக அலுவலகம் 
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெறவுள்ளன. இதற்கான தொகுதிகள் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் விரைவு படுத்தியுள்ளன.

இந்நிலையில், அதிமுக - பாஜக இடையே கூட்டணி முடிவுகள் எட்டப்படாத நிலையில் தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இதையடுத்து, இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

இதில் சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, நேற்று அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-ல் தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஏன்?

நூறாவது டெஸ்ட் போட்டியில் 100*.. சாதனை படைத்த முஷ்ஃபிகுர் ரஹிம்!

நுவாபாடா எம்எல்ஏவாக பதவியேற்றார் ஜெய் தோலாகியா!

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ: நயினார் நாகேந்திரன்

பேச மாட்டாயா? மானசா சௌத்ரி!

SCROLL FOR NEXT