முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 2,533 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் 3ஆவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

தமிழகத்தில் 3ஆவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,80,103-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,059 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 393, திருவள்ளூர் 142, கோவை 117, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,28,758-ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது 13,319 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →