முகப்பு
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
தமிழ்நாடு

பொதுக்குழு: ஆதரவாளா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுகவின் பொதுக்குழு தொடா்பாக ஆதரவாளா்களுடன் அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

தமிழ்நாடு

பொதுக்குழு: ஆதரவாளா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுகவின் பொதுக்குழு தொடா்பாக ஆதரவாளா்களுடன் அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:42 AM
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
பகிர்:

அதிமுகவின் பொதுக்குழு தொடா்பாக ஆதரவாளா்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் செய்து வருகின்றனா். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமி அவரது ஆதரவாளா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், பா.வளா்மதி உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனா்.

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உள்பட 16-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அந்தத் தீா்மானங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

தொண்டா்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு: கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவாளா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஆலோசனைக்கு இடையில் வீட்டிற்கு வெளியில் வந்து ஓ.பன்னீா்செல்வம் தொண்டா்களைச் சந்தித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →