தமிழ்நாடு

காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!

காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்பு பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை முதல் போக்குவரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தார்.

DIN


வேலூர்: காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்பு பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை முதல் போக்குவரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தார்.

பழுதடைந்திருந்த காட்பாடி ரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்கும் வகையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதையொட்டி பாலத்தின் மீது மீண்டும் இருசக்கர வாகனப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பாலத்தின் மீது போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தி அதன் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பணிகள் நிறைவு பெற்ற காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை முறைப்படி திறந்து வைத்தார். 

கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், பாலத்தின் மீது சரக்கு வாகனங்களை இயக்குவது தொடா்பாக பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிப்போர்வை போர்த்தி காட்சிதரும் ஹிமாசல்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ரோஹித், ஷ்ரேயாஸ் அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

நிதீஷ் குமாரை ஒருபோதும் பாஜக முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்!

சிட்டி யூனியன் வங்கி - டிஜிட்டல் பேமெண்ட் உலகில் ஒரு புதுமை!

SCROLL FOR NEXT