தமிழ்நாடு

கோவை திருவள்ளுவர் நகரில் உள்ள மலையில் ஒற்றை யானை நடமாட்டம்

DIN


கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருவதால், யானையை ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. மலையின் கீழ் பகுதியில் யானை நடமாடி வருகிறது. இதனால் யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊர்க்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், வனத்துறையினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்புப் பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இப்பகுதியில் நீண்ட நாள்கள் கழித்து மலையில் யானை நடமாடுவதால் பொதுமக்கள் யானையை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT