முகப்பு
தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் இன்றுமிக பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:43 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் புதன்கிழமை கூறியது: மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 8: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.