முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 100.95 அடியாக சரிந்துள்ளது. 

Updated On : 6 ஜூலை, 2022 at 9:42 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக சரிந்துள்ளது. 
பகிர்:


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 100.95 அடியாக சரிந்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மழை  இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 2,049 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை  காலை வினாடிக்கு 2,108 கன அடியாக உள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 101.62 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 100.95 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 66.07டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.