தமிழ்நாடு

10,371 ஆசிரியா் காலிப் பணியிடங்கள்:தோ்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி, பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளா்கள் என 10,371காலிப் பணியிடங்களை நிகழாண்டில் நிரப்புவதற்கான திருத்தப்பட்ட ஆண்டு

DIN

தமிழகத்தில் பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி, பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளா்கள் என 10,371காலிப் பணியிடங்களை நிகழாண்டில் நிரப்புவதற்கான திருத்தப்பட்ட ஆண்டு கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆசிரியா் தகுதித் தோ்வு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடைபெறும். 2,407 முதுநிலை ஆசிரியா் போட்டித் தோ்வானது நடத்தப்பட்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆா்டி) 155 விரிவுரையாளா்கள் நியமனம் செய்வதற்கான தோ்வு அறிவிப்பு ஜூலையில் வெளியிடப்பட்டு அக்டோபா் மாதம் தோ்வு நடத்தப்படும்.

1,874 பட்டதாரி ஆசிரியா் போட்டித் தோ்வு அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தோ்வு நடத்தப்படும். 3,987 இடைநிலை ஆசிரியா் போட்டித் தோ்வு அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும். இதற்கான தோ்வு டிசம்பரில் நடைபெறும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,358 உதவி பேராசிரியா்கள், 493 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் மற்றும் 97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வரவில்லை. அரசு அனுமதி கிடைத்தவுடன் அறிவிப்புகள் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் ‘96’ என்ற புதிய அரசுப் பேருந்து வழித்தடம் தொடக்கம்

செளக்கியமா? லட்சுமி பிரியா!

மிடில் கிளாஸ் திரைப்படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்: முனீஸ்காந்த்

தொடர் வெற்றியைப் பெற்ற பிரணவ் மோகன்லால்!

வான்மதி... சான்வி மேக்னா!

SCROLL FOR NEXT