தமிழ்நாடு

இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது.

அந்தவகையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனுது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2018-ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் அவா் எழுதியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”பொய் சொல்வதற்கும் அளவு வேண்டும்!”அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பதிலளித்த ஜெயக்குமார்! | ADMK | DMK

பாலிவுட் நடிகைக்குத் தொல்லை? சர்ச்சையில் இந்திய கேப்டன்!

ஜன நாயகன், பராசக்தி டிரைலர் தேதிகள்!

ரூ. 1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றம்!

2025! தமிழ்நாட்டில் கவனத்தை ஈர்த்த கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்!!

SCROLL FOR NEXT