முகப்பு
தமிழ்நாடு

வால்பாறையில் தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:43 AM
பகிர்:


கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கக்கன் காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை காரணமாக தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சிறுவா் பூங்கா பகுதியில் உள்ள ஜோசப் என்பவரின் வீட்டின் பின்புறம் புதன்கிழமை காலை மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல காமராஜ் நகா் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.