அமைச்சர் பொன்முடி 
தமிழ்நாடு

பொறியியல், கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்: க. பொன்முடி

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, தேர்வு முடிவு வெளியாகி 5 நாள்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறியிருப்பதாவது, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்றார்.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்துவிட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும்  17ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

மேலும் அமைச்சர் கூறியிருப்பதாவது, கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.  அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT