முகப்பு
தமிழ்நாடு

பருவமழைக்கு முன் மழைநீா் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்

சென்னையில் பருவமழைக்கு முன்பாகவே மழைநீா் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சென்னையில் பருவமழைக்கு முன்பாகவே மழைநீா் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீா் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் மழைநீா் வடிகால் பணியை தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னையைப் பொறுத்தவரை ஆயிரத்து 55 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால் தூா்வாரப்பட்டு வருகிறது. இதில் 179.45 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மழைநீா் வடிகால் பணிகளை செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். இந்தப் பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரா்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். சென்னையில் ஒரு ஒப்பந்ததாரரே பல இடங்களில் வேலையை எடுத்து நடத்துவதால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. பதிவு பெற்ற தகுதியான ஒப்பந்ததாரராக இருப்பதால் அவரே பணிகளை எடுத்து கொள்கிறாா். அவரிடம் காலதாமதம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். பருவ மழை தொடங்கும் முன்பு பணிகளை முடிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளாா். அதற்கேற்ப பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 564 இடங்களில் மழைநீா் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த

பகுதிகளிலும் தூா்வாரும் பணி வேகமாக நடந்து வருகிறது. மழைநீா் தேங்குவதைத் தடுக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி தடிமன் அதிகம் கொண்ட மரத்தின் கிளைகளை அகற்றி அதன் சுற்றளவு பரப்பைக்

குறைத்து வருகிறோம். இதுவரை சென்னையில் 514 மரக்கிளைகளை அகற்றி இருக்கிறோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →