தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கும் படி பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கும் படி பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மேனிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12, 13-ம் தேதியில் நடைபெறுவதாக இருந்தது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி தலைமை ஆசிரியர்கள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையும் படிக்க: உத்தரப் பிரதேசம்: வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்ட மாணவன், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
Advertisement
Advertisement
இதையடுத்து, அரசு மேனிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.