தமிழ்நாடு

பக்ரீத்: அதிராம்பட்டினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகை

DIN


பக்ரீத் பண்டிகையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் இஸ்லாமியர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி வருவது வழக்கம்.

பக்ரீத் பண்டிகை அன்று அனைவரும் ஒன்று கூடி கூட்டுத் தொழுகை நடத்துவது ஒவ்வொரு பக்ரீத் பண்டிகை அன்றும் நடைபெறும். இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அதிராம்பட்டினம் சிஎம்பி லைன் கல்லு கொள்ளை பகுதியில் உள்ள திடலில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட  இஸ்லாமியர்கள் இன்று காலை சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT