தமிழ்நாடு

வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார் விஜயபாஸ்கர்

அதிமுக பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் வியஜபாஸ்கர் தாக்கல் செய்தார்.

DIN


அதிமுக பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் வியஜபாஸ்கர் தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செயற்குழு ஒப்புதல் அளித்த 16 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. 

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். 

வழக்கமாக பொருளாளர் தான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து விஜயபாஸ்கர் பேசுகையில், இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர் நாளைய நிரந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார். 

அதிமுக கணக்கில் நிலை வைப்புத் தொகையாக ரூ.244.80 கோடி உள்ளது. 
09,01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள மொத்த வரவு ரூ.53,4 கோடி. மொத்த செலவு ரூ.62 கோடி என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT