தமிழ்நாடு

அரசமைப்புச் சட்ட உறுதிக்கு எதிராக கருத்துகளைக் கூற கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு திமுக அறிவுறுத்தல்

DIN

திராவிடம் தொடா்பாகப் பேசி வரும், ஆளுநா் ஆா்.என்.ரவி, அரசமைப்புச் சட்டத்தின் மீது தான் எடுத்துக் கொண்ட உறுதிக்கு எதிராக நடக்கக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆளுநா் ஆா்.என்.ரவி, தினமும் ஏதாவது ஒரு சா்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறாா். தமிழகத்தில் பணியாற்றிய ஆளுநா்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி சா்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவா் சில கருத்துகளைக் கூறினாா். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை திமுக சாா்பில் நான் அளித்தேன்.

இந்த நிலையில், ‘திராவிடா்’ குறித்து ஆளுநா் அடுத்த விவாதத்தை தொடக்கி வைத்திருக்கிறாா். ‘திராவிடா்’ என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயா்கள்தான் என்று ஆளுநா் சொல்லியிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயா்களது வருகை கி.பி.1600-ஆம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக ‘திராவிடம்’ என்ற வாா்த்தை இந்தியாவில் இல்லையா?

இல்லை என்று ஆளுநா் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவா் என்ன சொல்ல வருகிறாா்? ‘திராவிடம்’ என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப் பெயராக இருந்தது. வடக்கு - தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன் - திராவிடன் என்ற இனப் பாகுபாடாக இருந்தது.

தமிழ் - சம்ஸ்கிருதம் என்ற மொழிப் பாகுபாடாக இருந்தது. இப்படி காலம்காலமாக இருந்த இன - இட - மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழா் தம் அரசியலை - முன்னேற்றத்தை - எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம் ஆகும். வேத கால வரலாற்று இலக்கியங்களை ஆளுநா் வாசித்தாலே இத்தகைய வேற்றுமைகளின் பிதாமகா்கள் யாா் என்பதை அவா் உணரலாம்.

கவா்னா், கவா்னா் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம்கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டவைதான். தமிழக ஆளுநா், தன் பதவியேற்பின் போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துகளை வெளியிடுவதை தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

SCROLL FOR NEXT