தில்லியிலிருந்து சென்னை வந்தது குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்குப் பெட்டி
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவா் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டி தில்லியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னா், இந்த வாக்குப் பெட்டி சட்டப் பேரவைச் செயலக வளாகத்தில்
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவா் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டி தில்லியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னா், இந்த வாக்குப் பெட்டி சட்டப் பேரவைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் வரும் 18-இல் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிக்க உள்ளனா். குடியரசுத் தலைவா் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சட்டப் பேரவைச் செயலகம் செய்து வருகிறது.
வாக்குப் பெட்டி: தோ்தலில் வாக்குப் பெட்டி பயன்படுத்தப்பட உள்ளது. இதனை தில்லியில் இருந்து சட்டப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளா் கே.ரமேஷ், செவ்வாய்க்கிழமை இரவு எடுத்து வந்தாா். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த வாக்குப் பெட்டியானது, 7.45 மணியளவில் தலைமைச் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு பேரவைச் செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப் பெட்டி வைத்து பூட்டப்பட்டது.
வாக்குப் பதிவு தினத்தன்று காலையில், தோ்தல் நடத்தும் அதிகாரி, உதவித் தோ்தல் அதிகாரி, தோ்தல் பாா்வையாளா்
ஆகியோா் முன்னிலையில் வாக்குப் பெட்டி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும். வாக்குப் பெட்டிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.