தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் திமுக வெற்றி

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளரான கு.சுப்பராயன், 1,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட்ட வே. ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அப்பதவி காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் காலியாகவுள்ள உள்ளாட்சிப் பணியிடங்களுக்கான தேர்தல் ஜூலை 9 ஆம் தேதியும்,வாக்கு எண்ணிக்கை ஜூலை 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனவும் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 36-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் ஏற்கனவே உயிரிழந்த வே.ஜானகிராமனின் தந்தை வேணுகோபாலும், திமுக சார்பில் கு.சுப்பராயன் உள்பட 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு ஜூலை 9 ஆம் தேதி தேர்தல் நடந்தது.

மொத்த வாக்குகள் 4,510-இல் 2,597 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் மாநகராட்சி அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக 1,759, அதிமுக 568, பாமக 88, அமமூக 78, நாம் தமிழர் கட்சி 37, சுயேச்சை வேட்பாளரான சுரேஷ்(67) என முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை விட திமுக வேட்பாளரான கு.சுப்புராயன் 1191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான ஜி.கண்ணன் வழங்கினார். வெற்றி பெற்ற உறுப்பினர் கு.சுப்புராயனை திமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், எம்.பி. க.செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT