ஆகஸ்ட் 3 முதல் அரசு பேருந்துகளில் சரக்குகள் எடுத்துச் செல்லும் திட்டம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
வருவாயைப் பெருக்கும் வகையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளா
வருவாயைப் பெருக்கும் வகையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:- தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற பொருட்களான திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகா்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் பிற ஊா்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பாா்சல் சா்வீஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாதம் முழுவதும் பேருந்துகளில் சரக்குகளை வாடகைக் கட்டண அடிப்படையில் ஏற்றிச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தச் சேவையைப் பெற விரும்புவோா் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்கள் பெற கீழ்க்கண்ட கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
சென்னை, தலைமையகம் - 94450 14416/ 94450 14424
கோயம்பேடு 94450 14452/ 94450 17793
மதுரை 94450 17791/94450 14426
திருச்சி 944501 4446/ 94450 14421 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.