ஒசூரில் 3 ஆயிரம் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு, ஆர்ப்பாட்டம்
ஒசூரில் பெரிய நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து தரக்கூடிய பொருட்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தி சிறு குறுந்தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கதவடைப்பு மற்றும் வேலை நிறுத்தம்
ஒசூர்: ஒசூரில் பெரிய நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து தரக்கூடிய பொருட்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தி சிறு குறுந்தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கதவடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒசூர் சிறுகுறுந்தொழில் சங்கத் தலைவர்கள்.
தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் சுமார் 3 ஆயிரம் தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியப்படி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கவண ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Advertisement
Advertisement
கையில் பதாகைகளை ஏந்தியப்படி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கவண ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒசூர் சிறுகுறுந்தொழில் சங்கத் தலைவர் வேல்முருகன், இணைத்தலைவர் மூர்த்தி, செயலாளர் வடிவேல் பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர்கள் ஞானசேகரன், தனசேகரன், ரமணி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.