கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் மண்சரிவு புதன்கிழமை ஏற்பட்டது.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை லோயர்கேம்பிலிருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரச்சல் பாலம் அருகில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையைப் பயன்படுத்தும் தமிழக கேரள வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இது குறித்து குமுளி காவல் நிலைய போலீசார் கூறியது,
தொடர் மழை காரணமாக லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலை கண்காணிக்கப்படுகிறது. மேலும் இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இரவு மலைப்பாதையில் ரோந்து பணி நடைபெறுகிறது என்றார்.
மண்சரிவை உடனே அகற்றி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.