தமிழ்நாடு

ஆனி மாத பெளர்ணமி: சுருளிமலை சுருளிநாதருக்கு முக்கனி பூஜை

தேனி மாவட்டம் சுருளிமலை சுருளிநாதருக்கு ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு முக்கனி  பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம் சுருளிமலை சுருளிநாதருக்கு ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு முக்கனி  பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் வளாகத்தில் தென்கைலாய நாதர் என்ற சுருளி நாதர் கோயில் உள்ளது. ஆனி மாதம் புதன்கிழமையன்று  பௌர்ணமி நாளாததால்  மா, பலா, வாழை என முக்கனியை தென்கைலாய நாதருக்கு படைத்து சிறப்புப் பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முக்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜைகளை கணேஷ் திருமேனி செய்தார்.

அருகே உள்ள கைலாசநாதர் குகை கோயிலில் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று சுருளி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தத்தை குலதெய்வ கோயில்களுக்கு கொண்டு சென்றனர், அன்னதானமும் நடைபெற்றது. அருகில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலிலும் பெளர்ணமி தின பூஜை நடைபெற்றது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

கம்பம் காசிவிசுவநாத சுவாமி கோயிலில் பெளர்ணமி தின சிறப்புப் பூஜை நடைபெற்றது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

2-வது டி20: ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

நவ. 3 - 6 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!

SCROLL FOR NEXT