முகப்பு
தமிழ்நாடு

இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு: பெங்களூரு இளைஞா் கைது

சென்னை பாரிமுனையில் இரு கடைகளின் கதவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக பெங்களூருவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

சென்னை பாரிமுனையில் இரு கடைகளின் கதவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக பெங்களூருவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பாரிமுனை ரத்தன் பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் மு.மூசா (62). இவா் அங்கு பொம்மை கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் கடையின் அருகே முகேஷ் என்பவா் ஜவுளிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா்கள் இருவரின் கடையின் கதவு பூட்டுகளை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த பணம் கடந்த 1-ஆம் தேதி திருடப்பட்டது.

இதில் மூசா கடையில் ரூ.1.40 லட்சமும், ரூ.5 லட்சமும் திருடப்பட்டது. இது குறித்து இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது கா்நாடக மாநிலத்தின் பெங்களூரு ஆணைக்கல் அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த நா.ஆனந்த் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் தலைமறைவாக இருந்த ஆனந்தை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.3.99 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். மேலும் ஒரு காா்,முகமூடிகள்,கையுறைகள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினா். விசாரணையில் ஆனந்த் மீது பெங்களூருவில் 10 வழக்குகளும்,ஓசூரில் 5 வழக்குகளும் என மொத்தம் 19 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →