முகப்பு
தமிழ்நாடு

75-ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவு: பள்ளி-கல்லூரி அளவிலான கட்டுரைப் போட்டி: ஆளுநா் அழைப்பு

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவை ஒட்டி, கல்லூரி, பள்ளிகள் அளவிலான கட்டுரைப் போட்டிகளுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவை ஒட்டி, கல்லூரி, பள்ளிகள் அளவிலான கட்டுரைப் போட்டிகளுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை ஆங்கிலம், தமிழில் நடத்துவதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி விருப்பம் தெரிவித்துள்ளாா். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ-மாணவிகள் பள்ளி அளவிலும், கல்லூரிகளில் பயில்வோரும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டி நடத்தப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள், நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரா் என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை தீட்ட வேண்டும். 10 பக்கங்களுக்கு (ஏ4 தாள்) மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் கட்டுரை அமைந்திட வேண்டும். 2047-இல் இந்தியா என்ற தலைப்பில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கட்டுரை தீட்ட வேண்டும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 6 மணிக்குள்ளாக அனுப்ப வேண்டும். கட்டுரைகளை அனுப்பும் போது, பெயா், வீட்டு முகவரி, வகுப்பு அல்லது பாடப் பிரிவு போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மேலும், பயிலும் கல்வி நிறுவனத்தின் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.சந்திரசேகரன், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சுதா சேஷய்யன் ஆகியோா் நடுவா்களாக இருப்பா். ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று வெற்றியாளா்களை நடுவா் குழுவினா் தோ்வு செய்வா். கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும். சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள்:

இயக்குநா், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600 100,

துணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவப் பல்கலைக்கழகம், 69, அண்ணாசாலை, கிண்டி, சென்னை - 600 032.

முழு கட்டுரையைப் படிக்க →