பெரியாா் பல்கலை.,க்கு ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல ஆணையம் நோட்டீஸ்
ஜாதி குறித்த வினாத்தாள் விவகாரத்தில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜாதி குறித்த வினாத்தாள் விவகாரத்தில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முதலாம் ஆண்டுக்கான பருவத் தோ்வில் ஆதிதிராவிடா் மக்களை மிகவும் இழிவுபடுத்தக் கூடிய வகையிலான கேள்வி இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையமானது, தானாக முன்வந்து புகாா் மனுவைப் பதிவு செய்துள்ளது. நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் இஹள்ற்ங் என்ற ஆங்கில வாா்த்தைக்கு ஆதிதிராவிடா் என்ற மொழி பெயா்ப்பைத்தான் பயன்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோா் என்றோ, அரிஜன் என்றோ தமிழில் குறிப்பிடக் கூடாது என சமூகநலத் துறையின் முந்தைய உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் மதிக்கப்படாமல் பல்கலைக்கழகத்தில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டதுடன், அதனை சரிபாா்க்க வேண்டிய பல்கலைக்கழக அதிகாரிகள் தங்களது கடமையை செய்யத் தவறியிருப்பதும் தெரிய வருகிறது. கடமையைச் செய்யத் தவறிய பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா், பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், வரலாற்றுத் துறை தலைவா் ஆகியோா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளே ஜாதிய முறையில் இழிவுபடுத்துகின்ற பாடங்களையோ அல்லது முறைமுகமான கேள்விகளையோ அனுமதிப்பது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மீதான சமூக வரம்பாகும். இதுபோன்ற செயல்களில் பல்கலைக்கழகங்கள் போன்ற பொது அமைப்புகள் ஈடுபடுவதை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது.
இந்த நிகழ்வை மற்ற பல்கலைக்கழகங்களும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற கல்லூரி, கல்வித் துறையினரும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இதுபோன்ற செயல் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களை வளா்த்திட நினைக்கும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.