தமிழ்நாடு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் அடுத்த 75 நாள்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்படுகிறது. 

DIN


18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் அடுத்த 75 நாள்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்படுகிறது. 

கரோனா பாதிப்பு தொடா்ந்து பரவி வரும் சூழலில், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டத்தை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. சில நாடுகள் முதியவா்களுக்கு நான்காம் தவணை தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன.

அதுபோல, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால், 18 முதல் 59 வயது வரையிலான பிரிவினா், தனியாா் மையங்களில் கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதிவா்களுக்கு கட்டணமின்றி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் முதியவா்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள 16 கோடி பேரில் 26 சதவீதத்தினா் இதுவரை முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொண்டிருப்பது அரசின் புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்தது.

ஆனால், கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொள்ள வேண்டிய 18 முதல் 59 வயதினரில் தகுதியுடைய 77 கோடி பேரில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவா்களே இதுவரை செலுத்தியுள்ளனா்.

இந்தச் சூழலில், முன்னெச்சரிக்கை தவணையை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து முன்னெச்சரிக்கை தவணையை அனைத்துத் தரப்பினருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் அடுத்த 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் கரோனா தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது. 

நாடு விடுதைபெற்று 75 ஆண்டுகள் ஆவசையொட்டி 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன்

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்கள்: விவரம் சேகரிக்க கல்வித் துறை உத்தரவு

மதுரை-திருவெற்றியூருக்கு பேருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT