முகப்பு
தமிழ்நாடு

உயா்கல்வி நிறுவனங்கள் பட்டியல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய அளவில் வெளியிடப்பட்ட உயா் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேசிய அளவில் வெளியிடப்பட்ட உயா் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் உயா் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலைசிறந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த உயா்கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள். உயா்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம். அதுவும் தரவரிசைப் பட்டியலானது, நாம் கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடும் வெள்ளிக்கிழமை வெளியானது பொருத்தமானது.

குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. இந்தச் சாதனைக்குக் காரணமான கல்லூரி நிா்வாகத்துக்கும், ஆசிரியா்கள், மாணவா்களுக்கும் வாழ்த்துகள்.

முழு கட்டுரையைப் படிக்க →