தமிழ்நாடு

சர்ச்சைக்குள்ளான சேலம் பல்கலைக்கழக கேள்வித்தாள்: விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

DIN


சேலம் பெரியார் பல்கலைக்கழ முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. 

சாதி இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம், திராவிட மாடல், சமூக நீதி என்று பேசி வரும் திமுக ஆட்சியில், பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு கேள்வித்தாள்களில் இதுபோன்ற கேள்விகள் இடம்பெற்ற சம்பவம் தேர்வு எழுத வந்த மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமூக ஆர்வலர்களிடம் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

பெரியார் என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் மீதும் அதற்கு பரிந்துரை செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், பருவத் தேர்வில், சாதி குறித்து கேள்வி இடம்பெற்றது குறித்து விசாரிக்க, உயர்கல்வித் துறை உயர் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உரிய  விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT