அன்பில் மகேஷ் பொய்யாமொழி / எ.வ.வேலு 
தமிழ்நாடு

விஷமிகளால் கலவரம்; பேருந்துகளுக்கு தீ வைத்தது ஏன்? -எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

DIN

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

மேலும், மாணவர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் ஊடுருவி அமைதியாக நடைபெற்றுவந்த போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் நிகழ்ந்த தனியார் பள்ளியை அமைச்சர்கள் குழு இன்று நேரில் சென்று பார்வையிட்டது. இந்த குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சி.வ.கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதன் பிறகு அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே கலவரத்தைத் தூண்டியுள்ளனர். மாணவர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் ஊடுருவி அமைதியாக நடைபெற்றுவந்த போராட்டத்தை கலவரமாக மாற்றியுள்ளனர்.  

வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் வன்முறை ஏற்பட்டது. பள்ளியில் விடுதியில் உள்ள மாணவர்களை காக்க வேண்டும் என்பதே காவல் துறையின் நோக்கமாக இருந்தது.

நாளை மாணவியின் பெற்றோர் முன்பு அரசு மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டபோதும் காவல் துறையினர் பொதுமக்களை பாதுகாத்தனர்.

அமைச்சர் சி.வ.கணேசன் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக மாணவியின் தாயார் அமைச்சரிடம் குறிப்பிட்டார். வன்முறை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT