தமிழ்நாடு

ஈரோடு சிறுமி கரு முட்டை வழக்கு: தனியார் மருத்துவமனை சீல் அகற்ற உத்தரவு

DIN

சென்னை: ஈரோடு சிறுமி கரு முட்டை வழக்கில், ஈரோடு தனியார் மருத்துவனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

புதிய நோயாளிகளை சேர்க்க தமிழக அரசு தடை விதித்த உத்தரவையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சீல் வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனை தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சீலை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த 16 வயது சிறுமி ஒருவரின் கரு முட்டையை சட்டவிரோதமாக செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வணிக ரீதியாக விற்பனை செய்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

ஈரோடு சிறுமி கரு முட்டை விற்பனையில் தொடா்புடைய நான்கு தனியாா் மருத்துவமனைகளை 15 நாள்களுக்குள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு தனியார் மருத்துவனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT