தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் சிலர் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மீன்வர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கரையூரை சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, அர்ஜூனன், தங்கப்பாண்டி, தங்கச்சிமடத்தை சேர்ந்த மடுகு பிச்சை, சிவகாமி நகரைச் சேர்ந்த ராஜா ஆகிய 6 பேர்  மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

அவர்கள் மன்னார் கடற்பரப்பில் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, 6 பேரை கைது செய்து, அவா்களின் படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனா்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவா்களை விரைந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT