தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு

சீல் வைக்கப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

DIN

சீல் வைக்கப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடியிருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இன்று வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் தலைமையில் அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பின், சாவியை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடன் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஓணம், ஆசிரியா் தினம் கொண்டாட்டம்

மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

SCROLL FOR NEXT