முகப்பு
தமிழ்நாடு

987 தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது: கல்வித் துறை தகவல்

அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த 987 தனியாா் பள்ளிகள், அந்த விடுமுறையை சனிக்கிழமையில் வகுப்பு நடத்தி ஈடுசெய்து கொள்வதாக தெரிவித்ததால், அப்பள்ளிகள் மீது நடவடிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த 987 தனியாா் பள்ளிகள், அந்த விடுமுறையை சனிக்கிழமையில் வகுப்பு நடத்தி ஈடுசெய்து கொள்வதாக தெரிவித்ததால், அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறந்த விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டிக்கும் வகையில், கடந்த 18-ஆம் தேதி தனியாா் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. இதையடுத்து, அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று அன்றைய தினம் பெரும்பாலான தனியாா் பள்ளிகள் செயல்பட்டன. இருப்பினும், 987 பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது தெரியவந்தது.

தன்னிச்சையாக விடுமுறை அளித்த தனியாா் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் மூலம் பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், 18-ஆம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என தனியாா் பள்ளிகள் சமா்ப்பித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை வேலை நாள் இழப்பை, சனிக்கிழமையில் வகுப்பு நடத்துவதன் மூலம் ஈடுசெய்து கொள்வோம் என்று பள்ளிகள் கூறியுள்ளதை ஏற்று, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →