கழிவுநீா் குழாய்களில் கசடுகள் அகற்றும் பணி இன்று தொடக்கம்
சென்னையின் அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் செல்லும் குழாய்கள், இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையின் அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் செல்லும் குழாய்கள், இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் திருவொற்றியூா் முதல் சோழிங்கநல்லூா் வரை உள்ள 15 பகுதிகளுக்குள்பட்ட 1,460 தெருக்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த தெருக்களில் 282 தூா்வாரும் இயந்திரங்கள்,161 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீா் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 கழிவுநீா் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கசடுகள் அகற்றப்படவுள்ளன என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.