முகப்பு
தமிழ்நாடு

பொன் மாணிக்கவேல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பொன் மாணிக்கவேல்
பகிர்:

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து, சிலை தடுப்பு பிரிவினர் மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் பொய் வழக்குத் தொடுத்தார் என அவ்வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட  ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. காதர் பாட்ஷா தரப்பிலிருந்து முன்னதாக இந்த புகார் மனுவை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், நீதிமன்றத் தரப்பிலிருந்து பதில் வராததைச் சுட்டிக்காட்டியதுடன் பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்கிறார் என்றும் கூறப்பட்டது.

விசாரணை முடிவில், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments