தமிழ்நாடு

இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கரோனா தொற்றிலிருந்து மீண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் செல்கிறார். 

DIN

கரோனா தொற்றிலிருந்து மீண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் செல்கிறார். 

கடந்த ஜூலை 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

எனினும், காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை(ஜூலை 18) மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் சில நாளில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 

இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் சென்று தன் பணியை தொடங்கவிருக்கிறார்.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT