தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு பொருட்கள், சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு பொருட்கள், சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

ரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து சென்னை வந்த இரண்டு விமானப்பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 2.573 கிலோ எடையுள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.13 கோடியாகும்.

மற்றொரு நிகழ்வில் துபைலிருந்து சென்னை வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 1.578 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.69.43 லட்சமாகும். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6.85 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களும் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. 

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த  பொருட்களின் மதிப்பு ரூ.2.01 கோடியாகும். இதைத்தொடர்ந்து நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT