தமிழ்நாடு

நாளை குரூப்-4 தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

DIN

நாளை குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்குகிறது. 

தமிழகத்தில் குரூப் 4 தோ்வு (ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் தோ்வு செய்யப்பட்ட 7,689 மையங்களில் மொத்தம் 22,02,942 போ் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக அனைத்து மையங்களிலும் அடிப்படை வசதிகளும், கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும்படையினா், நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

சென்னையைப் பொறுத்தவரை, 503 மையங்களில் மொத்தம் 1,56,218 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்த நிலையில் நாளை குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்குகிறது. அந்தந்த ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கவும், தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்புப்பேருந்துகள் முறையாக நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT