தமிழ்நாடு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

DIN


கடலூர் மாவட்டம், டி.கள்ளயங்குப்பம் கிராமத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ​கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா ப. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி சிவசங்கரி (வயது 33) சனிக்கிழணை பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர்மீது இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

​உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

​மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT